வேளாண் கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள்

மத்திய விவசாய விளைபொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளில் 571 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

Update: 2019-02-18 09:34 GMT
சென்டிரல் வேர்ஹவுசிங் கார்ப்பரேசன் எனப்படும் மத்திய பண்டகசாலை கழகம், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உணவுப்பொருள் பாதுகாப்பு கிட்டங்கிகளை பராமரித்து வருகிறது. மத்திய விவசாயத்துறையின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தற்போது மேனேஜ்மென்ட் டிரெயினி, ஜூனியர் சூப்பிரண்டென்ட், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 571 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிக பட்சமாக ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு 238 இடங்களும், ஜூனியர் சூப்பிரண்டென்ட் பணிக்கு 155 பணியிடங்களும், சூப்பிரண்டென்ட் (ஜெனரல்) பணிக்கு 88 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

வயது வரம்பு

‌ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், இந்தி டிரான்ஸ்லேட்டர், மேனேஜ்மென்ட் டிரெயினி போன்ற பணிகளுக்கு 28 வயதுக்கு உட்பட்டவர்களும், மற்ற பணி களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 16-3-2019-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

வேளாண்மை பட்டப்படிப்பு அல்லது உயிரியல், வேதியியல், உயிர் வேதியியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள் அசிஸ்டன்ட் என்ஜினீயர் பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். பி.காம், பி.ஏ. வணிகவியல், சி.ஏ., எம்.பி.ஏ., மற்றும் இதர முதுநிலை படிப்பு படித்தவர் களுக்கும் பணியிடங்கள் உள்ளன.

கட்டணம் :

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.1000 கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைத்துப் பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள் ரூ.300 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

தேர்வு செய்யும் முறை

ஆன்லைன் தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப் படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். மார்ச் 16-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். ஆன்லைன் தேர்வு ஏப்ரல்-மே மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்காணல் பற்றிய கடிதம் பின்னர் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் http://cewacor.nic.in/index.php என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

மேலும் செய்திகள்