மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் தாராவியில் ஆன்மிக ஜோதி விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
தாராவியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆன்மிக ஜோதி விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மும்பை,
தாராவியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் ஆன்மிக ஜோதி விழா நடந்தது. இதில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆன்மிக ஜோதி விழா
மும்பை, நவிமும்பை, புனே மாவட்ட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் பங்காரு அடிகளாரின் 79-வது அவதார திருநாளை முன்னிட்டு தாராவி மனோகர் ஜோஷி கல்லூரி மைதானத்தில் 8-ம் ஆண்டு பெருமங்கள ஆன்மிக ஜோதி விழா நடந்தது. இதையொட்டி தாராவி பி.எம்.ஜி.பி. காலனியில் இருந்து ஆன்மிக ஊர்வலம் நடந்தது.
பின்னர் மைதானத்தில் வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து கோ.ப. செந்தில்குமார் ஆன்மிக ஜோதியை ஏற்றி வைத்தார். கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., கார்த்திக் முத்துராமலிங்கம், பி.எஸ்.கே.கணேஷ் ஆகியோர் 27 துணை ஜோதியை ஏற்றி வைத்தனர்.
கல்வி ஊக்கத்தொகை
40 மாணவர்களுக்கு தலா ரூ.9 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை, 108 பெண்களுக்கு இலவச சேலை, மடிக்கணினி உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தாராவி பி.என்.ஜி.பி. காலனி மன்றத்தில் சக்தி பீடம் நிறுவ ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
சுந்தரேசன், சோமசுந்தரம் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர். விழாவில் ராகுல்செவாலே எம்.பி., வர்ஷா கெய்க்வாட் எம்.எல்.ஏ., திவ்யா டோலே, பி.எஸ்.பட்டதேவர், அரசப்ப தேவர், முருகேஷ் குருசாமி, கோபாலகிருஷ்ணன், முத்துபட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ராஜீவ், சுந்தர், பிச்சம்மாள், ஞானசேகர், மணிமேகலை, மணி ஆகியோர் செய்திருந்தனர்.