திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் பரிதாபம்

கடலூரில் திருமணமான 11 மாதத்தில் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-02-17 22:45 GMT
கடலூர், 

கடலூர் புதுப்பாளையம் ஆர்.சி.நகரை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி கார்த்தினி (31). இவர்களுக்கு திருமணமாகி 11 மாதங்கள் ஆகிறது. தற்போது கார்த்தினி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

ஏற்கனவே சற்று மனநிலை பாதிக்கப்பட்ட ரவிக்குமாரை நேற்று முன்தினம் கார்த்தினி வன்னியர்பாளையத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தில் விட்டு, விட்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-7 தேர்வு எழுத சென்று விட்டார். தொண்டு நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் இருந்த ரவிக்குமார் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

இதை அறிந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது பற்றி கார்த்தினி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த ரவிக்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்