ராஜபாளையத்தில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ராஜபாளையத்தில் மரம் நடுதல், ரத்ததானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் குறித்து நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் 500–க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோவில் திடலில் தனியார் அமைப்பு சார்பில் மரம் நடுதல், உடல் உறுப்பு மற்றும் ரத்த தானம் செய்வதன் அவசியத்தினை வலியுறுத்தி மாணவ–மாணவிகள் கலந்து கொண்ட குறு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியினை வைமா பள்ளிகளின் முதல்வர் திருப்பதி செல்வன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
குழந்தைகள் முதல் 10–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகள் 500–க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவில் வளாகம் சுற்றிலும் நடைபெற்ற மாரத்தான் போட்டியினை மாணவ–மாணவிகளின் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து உற்சாகப்படுத்தினர்.
முன்னதாக தமிழரின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் மல்லர் கம்பம் விளையாட்டினை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.