பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்ற 11 பேர் சிக்கினர் ரூ.41 ஆயிரம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.41 ஆயிரத்து 670 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-02-17 22:45 GMT
ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அட்கோ போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் பாகலூர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக மத்திகிரியை சேர்ந்த சக்தி (வயது 30), வாணியம்பாடி அம்பேத்கர் நகர் பிரவீன்குமார் (29), தினகரன் (21), தங்கராஜ் (21), பிரசாந்த்குமார் (26) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 லாட்டரி சீட்டுகளும், ரூ.12 ஆயிரத்து 940-ம் பறிமுதல் செய்யப்பட்டது.

காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் சேலம் சாலை மற்றும் டவுன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றதாக மிட்டஅள்ளி ரஜினி (39), கிருஷ்ணகிரி மேற்கு மாட தெரு உபயத்துல்லா (27), காரிமங்கலம் ராமசாமி கோவில் தெரு ஷாஜகான்(45) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரத்து 480 மற்றும் 63 லாட்டரி சீட்டுக்கள், ஒரு மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல தேன்கனிக்கோட்டை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் மஜித் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியை சேர்ந்த முபாரக் (35) என்பவரை கைது செய்தனர். ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அரசு ஆஸ்பத்திரி அருகில் பெட்டிக்கடைகளில் லாட்டரி சீட்டு விற்ற திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த முகமது ரபீக் (45), ஊத்தங்கரை கதவணைபுதூரை சேர்ந்த பெருமாள் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 சீட்டுக்கள் மற்றும் ரூ.8,250 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்