வத்தலக்குண்டுவில் ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் பட்டியலில் குளறுபடி நடந்து இருப்பதாக கூறி கிராம மக்கள் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-02-14 22:30 GMT
வத்தலக்குண்டு,

வத்தலக்குண்டு அருகே அய்யங்கோவில்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 115 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி வறுமை கோட்டிற்கு கீழ் 92 பேர் இருந்தனர். ஆனால் தற்போது கணக்கெடுப்பின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் 60 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பட்டியல் குளறுபடியை கண்டித்து கிராம மக்கள் வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த அதிகாரிகள் கணக்கெடுப்பு குறித்து, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வாழ்வாதார இயக்க அலுவலகத்துக்கு சென்று கேட்க வேண்டும் என கூறினர். அதை கிராம மக்கள் ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரியே நேரில் வந்து கூற வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த வத்தலக்குண்டு போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராம மக்கள் சமாதானம் அடைந்து அங்கு இருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்