நாமக்கட்டி செய்யும் 16 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்
நாமக்கட்டி செய்யும் 16 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவிகளை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
செய்யாறு,
செய்யாறு தாலுகா ஜடேரி கிராமத்தில் வசிக்கும் பொது மக்கள் விவசாயத்துடன் புகழ் பெற்ற நாமக்கட்டி செய்யும் தொழிலை பல தலைமுறை களாக செய்து வருகின்றனர். இவர்கள் உற்பத்தி செய்யும் நாமக்கட்டி திருப்பதி உள்பட பல முக்கிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
நாமக்கட்டி செய்யும் தொழி லாளர்கள் பல ஆண்டுகளாக உற்பத்தி செய்யும் நாமக் கட்டியை சேமித்து வைக்க கிடங்கும், கடனுதவியும் வழங்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக் டர் கே.எஸ்.கந்தசாமி ஜடேரி கிராமத்திற்கு சென்று அப் பகுதி பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந் தார். பின்னர் ஒரு ஆண்டுக்கு நாமக்கட்டி செய்ய தேவை யான வெள்ளைப்பாறை மண்ணை தென்பூண்டிப்பட்டு கிராம எல்லையில் எடுத்து கொள்ள அனுமதி ஆணையை வழங்கினார்.
அப்போது அவரிடம் தொழிலாளர்கள், நாமக்கட்டி செய்ய அரசு சார்பில் கடனுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கலெக்டர் கந்தசாமி, நாமக்கட்டி செய்யும் தொழிலை சிறுதொழில் பட்டி யலில் சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொண்ட னர்.
இந்த நிலையில் நேற்று ஜடேரி கிராமத்தில் முதல் கட்டமாக 16 தொழிலாளர் களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டு 35 சதவீத அரசு மானியத்துடன் 16 பேருக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செய்யாறு உதவிகலெக்டர் ஆர்.அன்னம்மாள், தாசில்தார் ஆர்.மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.