யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகை சீட்டு எந்திர செயல்பாடு குறித்த விழிப்புணர்வுக்குழு வாகனங்கள் கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகை சீட்டு எந்திர செயல்பாடு குறித்த விழிப்புணர்வுக்குழு வாகனங்களை கலெக்டர் ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Update: 2019-02-10 22:15 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 661 வாக்குச்சாவடி மையங்களிலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு பதிவினை வாக்காளர் உறுதிசெய்து கொள்ளும் (ஒப்புகை சீட்டு) எந்திரங்களை கையாள்வது குறித்தும், அவற்றின் நம்பகத்தன்மையினை உறுதிப்படுத்தும் வகையிலும் விழிப்புணர்வுக்குழு வாகனங்களை நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆசியா மரியம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 6 குழுக்கள் வீதம் உரிய தளவாட வசதிகள், ஒலிபெருக்கி வசதிகளுடன் பயிற்சி அலுவலர்கள் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த விழிப்புணர்வு பிரசார குழுக்கள், வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஒப்புகை சீட்டு எந்திரத்தின் செயல்பாடுகளை விளக்க உள்ளனர். வருகிற 15-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறையினை மாதிரி வாக்குப்பதிவை மேற்கொண்டு அந்த குழுவினர் விளக்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் உள்பட அரசு அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதலாவதாக நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளி, கோட்டை நகரவை தொடக்கப்பள்ளி மற்றும் வகுரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வசந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சின்னவேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையங்களில் காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதள வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது நாமக்கல் தாசில்தார் செந்தில்குமார், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) கமலநாதன் உள்பட தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து .

மேலும் செய்திகள்