மன்னார்குடியில் 3 ஆயிரத்து 113 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் காமராஜ் வழங்கினார்
மன்னார்குடியில் 3 ஆயிரத்து 113 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பொன்.வாசுகிராம், முன்னாள் நகரசபை தலைவர் சுதாஅன்புச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 113 மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடியே 15 லட்சத்து 27 ஆயிரத்து 252 மதிப்பிலான விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட உயரிய திட்டமான விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் இன்றையதினம் இப்பள்ளியில் நடைபெறும் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. சாதாரண மக்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தியவர் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா.
மாணவ பருவம் என்பது கிடைக்காத பருவம். இப்பருவத்தில் கிடைக்கிற உலக அறிவை அனைத்து மாணவ-மாணவிகளும் பெற வேண்டும் என்பதே ஆசிரியர்கள், பெற்றோர் களின் விருப்பம். மாணவ- மாணவிகள் வாழ்க்கையில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வேண்டும். உங்களால் முடியும் என்பதை எண்ணி நன்கு படிக்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்களின் வாக்கியங்களை மாணவ,மாணவிகள் வாக்கியமாக எடுத்துக்கொள்ளாமல், வாழ்க்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு பள்ளி கல்விக்காக மட்டும் ரூ.28 ஆயிரத்து 588 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டதில், மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாதிரி பள்ளியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. மாணவ-மாணவிகள் நன்கு கல்வி கற்று எதிர்வரும் பொதுத்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கோட்டூர் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜீவானந்தம், மன்னார்குடி முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ் செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ராமன் நன்றி கூறினார்.