கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தடுப்பூசி முகாம்
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று முதல் நடைபெறுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவகங்கை,
கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
கோடைகாலம் அடுத்து வருவதால் புறக்கடைக் கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட்டு அவற்றின் இறப்புகள் தவிர்க்கப்படுவதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இன்று (சனிக்கிழமை ) முதல் வருகிற 22–ந்தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.
இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி போடப்படவுள்ளது
மாவட்டத்தில் உள்ள 2 கால்நடை மருத்துவமனை, 78 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 44 கால்நடை கிளை நிலையங்களில் கோழி கழிச்சல் தடுப்பூசி போடப்படும்.
கோடைகாலம் அடுத்து வருவதால் புறக்கடைக் கோழிகளுக்கு கழிச்சல் நோய் ஏற்பட்டு இறப்புகள் தவிர்க்கப்படுவதற்கு நடத்தப்படும் இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் கோழிகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.