பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை குறைந்தது

பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பின் விலை குறைந்தது.

Update: 2019-02-07 22:30 GMT
பரமத்திவேலூர், 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதன் பருப்புகளை சிறு விவசாயிகள் வியாழக்கிழமைதோறும் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருகின்றனர்.இங்கு தரத்திற்கு ஏற்ப மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 1,577 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.106.88-க்கும், குறைந்த பட்சமாக ரூ.101.19-க் கும், சராசரியாக ரூ.103.19-க் கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 646-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 1111 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது.

இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.104.20-க் கும், குறைந்த பட்சமாக ரூ.97.19-க்கும், சராசரியாக ரூ.103-க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.1 லட்சத்து ஆயிரத்து 285-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

தேங்காய் பருப்பின் வரத்து குறைந்து விலை சரிவடைந்தும் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்