புற்றுநோயை கண்டறியும் ‘ஸ்கான்’

நாம் எதற்கு அஞ்சுகிறோமோ, இல்லையோ புற்றுநோய் குறித்த அச்சம் அனைவருக்கும் உண்டு. உடலில் ஏதேனும் சாதாரணமான பிரச்சினை என்றால் கூட அது புற்றுநோயாக இருக்குமோ என்று கூகுளில் தேடுகிறோம்.

Update: 2019-02-06 09:42 GMT
கனடா நாட்டின் மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் குழு தோலில் ஏற்படும் புற்றுநோயை கண்டறியும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளது.

‘ஸ்கான்’ என்று பெயர் கொண்ட இந்த கருவியில் இருக்கும் சென்சார்கள், தோலில் இருக்கும் திசுக்களில் எது அதிகமாக வெப்பமாகிறதோ அதில் புற்றுநோய் உருவாகி இருக்கக் கூடும் என்று அடையாளம் காட்டுகிறது.

அதன்பின் மருத்துவர்களிடம் மேற்கொண்டு பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த கருவியை மிகவும் குறைவான விலையில் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

நோயின் ஆரம்ப நிலையிலே கண்டறிந்து உயிர் காக்கும் இந்தக் கருவியை கண்டுபிடித்த மாணவர்களுக்கு விருது கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்