பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலத் துறையின் மூலமாக பெண் குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2019-02-05 22:30 GMT
அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சமூகநலத் துறையின் மூலமாக பெண் குழந்தைகளை காப்போம், பெண்குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்னர் ஒரு பயனாளிக்கு (2 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதம்) ரூ.50,000- க்கான வைப்புத் தொகை பத்திரத்தை வழங்கினார். தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் பயன்பெறும் வகையில், மகளிர் உதவி மையத்தின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு சுவரொட்டி ஒட்டப்பட்டது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒட்டும் வில்லைகள் வழங்கப்பட்டது. இதில் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, பாதுகாப்பு அலுவலர் (சமூக நலத்துறை) வேலம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்