நாகர்கோவில் அருகே இரட்டைக்கொலை: கூலிப்படையை ஏவி கொன்றவரின் கள்ளக்காதலி பிடிபட்டார் பரபரப்பு தகவல்கள்
நாகர்கோவில் அருகே இரட்டை கொலை வழக்கில், கூலிப்படையை ஏவி கொன்றவரின் கள்ளக்காதலி பிடிபட்டார்.
ஆரல்வாய்மொழி,
நாகர்கோவில் அருகே தோவாளை கிருஷ்ணன்புதூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (வயது 55), பூ வியாபாரி. இவருடைய மனைவி கல்யாணி (40). இவர்களுடைய மகள் ஆர்த்தி (15). கடந்த 31-ந் தேதி இரவு ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து கல்யாணி, முத்துவை வெட்டிக் கொன்றனர். ஆர்த்தி படுகாயமடைந்தார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சொத்து தகராறில் கல்யாணியின் சகோதரர் சுடலையாண்டி கூலிப்படையை ஏவி கொன்றது தெரியவந்தது. தப்பிச்சென்ற கொலை குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிவந்தனர். இந்த கொலை தொடர்பாக நாகர்கோவில் கோட்டார் பஜனை மடத்தெரு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (26) என்பவரை ஆரல்வாய்மொழி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தனிப்படை போலீசார் சுடலையாண்டியின் முழு விவரங்களை சேகரித்தனர். அதில் அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதும், திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. சுடலையாண்டியின் கள்ளக்காதலிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
அந்த பெண்ணுக்கு பாலாஜி நகரில் சுடலையாண்டி வீடு கட்டி கொடுத்துள்ளார். சகோதரி மற்றும் அவருடைய கணவர் கொல்லப்பட்ட தகவலை அறிந்ததும் சுடலையாண்டி, கள்ளக்காதலி மற்றும் அவருடைய 2 மகள்களுடன் தலைமறைவாகி விட்டார்.
இந்தநிலையில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணை கண்காணித்தனர். அந்த எண் வேளாங்கண்ணியில் உள்ள விடுதியை அடையாளம் காட்டியது. இதனையடுத்து போலீசார் விரைந்து சென்று அந்த விடுதியை சுற்றி வளைத்தனர். அங்கு கள்ளக்காதலி, தனது மகள்களுடன் தங்கியிருந்தார்.
சுடலையாண்டி போலீஸ் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி விட்டார். இதனையடுத்து போலீசார் சுடலையாண்டியின் கள்ளக்காதலியை பிடித்து விசாரணை நடத்த குமரிக்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.