பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த கொத்தனாருக்கு ரூ.20½ லட்சம் நஷ்ட ஈடு தஞ்சை நீதிமன்றம் உத்தரவு

பஸ் கவிழ்ந்த விபத்தில் படுகாயம் அடைந்த கொத்தனாருக்கு ரூ.20½ லட்சம் நஷ்ட ஈடு வழங்குமாறு தஞ்சை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-05 22:15 GMT
தஞ்சாவூர்,

கோயம்புத்தூர் ஆஸ்.எஸ். புரத்தை சேர்ந்தவர் ஆனந்தரவிக்குமார். கொத்தனார். இவர் தற்போது தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள லட்சுமிநகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த 21-5-2017 அன்று மதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற ஆம்னிபஸ்சில் சென்று கொண்டிருந்தார்.

திண்டுக்கல் அடுத்த அம்மைநாயக்கனூர் அருகே உள்ள ஊத்துபட்டி என்ற இடத்தில் சென்ற போது பஸ் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. இதில் ஆனந்தரவிக்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனந்தரவிக்குமார், நஷ்ட ஈடு கேட்டு தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த், விசாரித்து ரூ.20 லட்சத்து 46 ஆயிரத்து 908 நஷ்ட ஈடு வழங்குமாறு திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் பஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்