நாகை மாவட்டத்தில் இதுவரை 54 ஆயிரம் டன் சம்பா நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல்
நாகை மாவட்டத்தில் இதுவரை 54 ஆயிரம் டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன என அமைச்சர் காமராஜ் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சம்பா பருவ நெல் கொள்முதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் காமராஜ் தலைமை தாங்கினார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், உணவுத்துறை முதன்மைச்செயலாளர் தயானந் கட்டாரியா, நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசும் போது கூறியதாவது:-
நாகை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 270 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 54 ஆயிரம் டன் சம்பா நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.3 கோடியே 30 லட்சம் ஊக்கத்தொகையாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட கலெக்டருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு டோக்கன் முறையை நடைமுறைபடுத்தி காலதாமதமின்றி நெல் கொள்முதல் செய்யப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்லின் தரம் உறுதி செய்யப்பட வேண்டும். அனைத்து நேரடி கொள்முதல் நிலையங்களுக்கும் தேவையான அளவில் சாக்குகள், நெல் தூற்றும் எந்திரங்கள், மின்னணு ஈரப்பதமானிகள் வழங்கப்பட்டுள்ளன.
கொள்முதல் பணிகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு நெல்லுக்கான தொகை மின்னணு பணபரிவர்த்தனை மூலம் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகள் எவ்வித சிரமமின்றி தங்கள் நெல்லை விற்பனை செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அமைச்சர்கள் காமராஜ், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நீலப்பாடி, குருமனாங்குடி, கீழ்வேளூர், ஆழியூர் மற்றும் சிக்கல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், கஜா புயல் சீரமைப்பு திட்ட பணிகள் கூடுதல் திட்ட இயக்குனர்் பிரதீப்குமார், எம்.எல்.ஏ.க்கள். பவுன்ராஜ், தமிமுன்அன்சாரி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொறுப்பு) திருநாவுக்கரசு, சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க கதிரவன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.