மீஞ்சூர் அருகே 2 குடோன்களில் பதுக்கி இருந்த ரூ.20 கோடி காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல்
மீஞ்சூர் அருகே 2 குடோன்களில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 கோடி மதிப்புள்ள காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே உள்ள நாலூர் ஏரிக்கரை பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 குடோன்கள் உள்ளது. இந்த குடோன்களில் விவசாயத்திற்கு பயன்படும் காலாவதியான பூச்சி கொல்லி மருந்து டப்பாக்களில் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டி புதியதாக தயாரித்தது போல் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வருவாய்துறையினர் மற்றும் பொன்னேரி போலீஸ் உதவி கமிஷனர் பவன்குமார் ரெட்டிக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உதவி கமிஷனர் பவன்குமார்ரெட்டி, மீஞ்சூர் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், பொன்னேரி கோட்டாட்சியர் நந்தகுமார், தாசில்தார் புகழேந்தி, வருவாய் ஆய்வாளர் செந்தில்முருகன் ஆகியோர் சம்பந்தப்பட்ட குடோனுக்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த 2 குடோன்களும் முறையான உரிமம் ஏதும் இல்லாமல் இயங்கி வருவது தெரியவந்தது.
மேலும், 2 குடோன்களையும் சோதனையிட்டபோது 50 டன் எடையுள்ள உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த காலாவதியான பூச்சி கொல்லி மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான அட்டைபெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்து டப்பாக்களின் மேல் புதியதாக தயாரிக்கப்பட்டது போல் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து காலாவதியான பூச்சி கொல்லி மருந்துகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், 2 குடோன்களுக்கும் ‘சீல்’ வைத்தனர்.
பறிமுதலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளின் மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடோனில் காவலாளிகளாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். குடோன் உரிமையாளரை தேடிவருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர், விவசாய பூச்சிகொல்லி மருந்து அலுவலர் மற்றும் தர ஆய்வாளர்கள் ஆகியோர் இன்று சோதனையிட உள்ளனர். அதன்பின்புதான் இதுகுறித்த முழுமையான தகவல்கள் வெளிவரும் என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.