சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் தங்க நகைகள் பறிமுதல்
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.8¼ லட்சம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செம்பட்டு,
சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி விமான நிலையத்துக்கு மாலை மற்றும் இரவில் 2 விமானங்கள் தனித்தனியாக வந்தன. அந்த விமானங்களில் இருந்து இறங்கிய பயணிகளிடம் சுங்க இலாகாவின் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகத்தின்பேரில் 5 பயணிகளை தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது அவர்கள் 249 கிராம் தங்க நகைகளை மறைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 31 ஆயிரம் ஆகும்.
தங்க நகைகளை கடத்தி கொண்டு வந்ததாக ஞானசம்பந்தன், ஆரோக்கியராஜ், கணேசன், மாரியப்பன், யோகராஜ் ஆகிய 5 பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.