திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
திருவாரூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு துரை, தொடங்கி வைத்தார்.
திருவாரூர்,
திருவாரூரில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. இந்த விழா வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் ரெயில் நிலையத்தில் சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் துண்டு பிரசுங்களை மக்களுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாலை விதிமுறைகளை கடைபிடித்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பை நிச்சயம் தடுக்க முடியும். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவது, வேகமாக செல்வதை தவிர்க்க வேண்டும்.
நமது வேகத்தை வாழ்க்கையில் வெற்றி இலக்கை அடைய காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக தலைகவசம் அணிந்து தான் வாகனம் ஓட்ட வேண்டும். மாணவர்கள் போக்குவரத்து சட்டத்தின்படி சரியான வயதில் மட்டுமே வாகனம் ஓட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகளில் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், வாகன ஆய்வாளர்கள் கருப்பண்ணன், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.