வடக்கன்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் பலி நண்பர் படுகாயம்

வடக்கன்குளம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிப்ளமோ என்ஜினீயர் பலியானார். உடன் சென்ற நண்பர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

Update: 2019-02-03 22:00 GMT
வடக்கன்குளம்,

வடக்கன்குளம் அருகே உள்ள கன்னங்குளத்தை சேர்ந்தவர் ஜெயபால் மகன் இனிகோ (வயது 21). டிப்ளமோ என்ஜினீயர். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பொன் அஜித் (19). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இருவரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் பொன்அஜித்துடன் இனிகோ பழவூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அம்பலவாணபுரம் விலக்கு அருகே சென்றபோது மோட்டார்சைக்கிள் திடீரென நிலைதடுமாறியது. இதனால் அங்கிருந்த தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இனிகோ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பொன்அஜித் படுகாயங்களுடன் ரோட்டில் கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழவூர் போலீசார் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த பொன் அஜித்தை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இனிகோவின் உடலை போலீசார் கைப்பற்றி, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பலியான இனிகோவின் உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுதொடர்பாக பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்