மு.க.ஸ்டாலின் பரமக்குடி வருகை ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று மக்களை சந்திக்கிறார்
மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி பரமக்குடி வருகை தருகிறார். பின்னர் அவர் வேந்தோணியில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களை சந்திக்க உள்ளார்.
பரமக்குடி,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி பரமக்குடி வருகிறார். அப்போது வேந்தோணி கிராமத்தில் நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களை சந்திக்க உள்ளார். இதுகுறித்த ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. ஆலோசனை கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் அவை தலைவர் தீனதயாளன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருகிற 5-ந்தேதி பரமக்குடிக்கு வருகை தரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட எல்லையான மரிச்சுகட்டியில் சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:- வருகிற 5-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பரமக்குடி யூனியன் வேந்தோணி கிராமத்தில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களை சந்திக்கிறார். அவர்களிடம் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிகிறார்.
அதன் பின்பு தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற உள்ள தி.மு.க. பூத் கமிட்டி முகவர்களை நேரில் சந்தித்து ஆய்வு செய்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் கலந்துகொள்ள வேண்டும். மாவட்ட எல்லையில் இருந்து பரமக்குடி வரை சாலையின் இருபுறமும் கொடிகள், தோரணங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி ஜெயக்குமார், தினகரன், நயினார்கோவில் சக்தி, போகலூர் கதிரவன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பாரகு, மாணவரணி அமைப்பாளர் பொன்துரைச்சாமி, துணை அமைப்பாளர் ராமபாண்டி, மாவட்ட தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் விஜயகதிரவன், போகலூர் ஒன்றிய பொருளாளர் குணசேகரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருளாந்து, பூமிநாதன், மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, வர்த்தக அணி அமைப்பாளர் முருகேசன், முன்னாள் இளைஞரணி செயலாளர் செல்வம், வக்கீல் பிரிவு கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர் துணை செயலாளர் மும்மூர்த்தி நன்றி கூறினார்.

முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், மாநில தீர்மானக்குழு துணை தலைவர் திவாகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திசைவீரன், முருகவேல், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பரமக்குடி நகர் செயலாளர் சேது கருணாநிதி வரவேற்று பேசினார்.