52-வது பிறந்த நாள் விழா: அமைச்சர் கந்தசாமி கேக் வெட்டி கொண்டாடினார் கோவில்களில் சிறப்பு பூஜை

அமைச்சர் கந்தசாமி நேற்று தனது 52-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Update: 2019-01-31 22:11 GMT
பாகூர்,

அமைச்சர் கந்தசாமி தனது 52-வது பிறந்த நாளை குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி இளைஞர் காங்கிரசார் சார்பில் நேற்றுக் காலை புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் குமரேஸ்வரன், அமைச்சர் கந்தசாமியின் மகன்கள் அமர்நாத், விக்னேஷ், அமைச்சரின் சகோதரர் பாலு, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மனும், அமைச்சரின் சகோதரியுமான முனியம்மாள் சாம்பவசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அமைச்சரின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு தங்கத் தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.

முதலியார்பேட்டையில் உள்ள அமைச்சரின் வீட்டில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் கந்தசாமி கேக் வெட்டினார். அப்போது அமைச்சர் நமச்சிவாயம் கேக் துண்டை கந்தசாமியின் வாயில் ஊட்டிவிட்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏக்கள் தீப்பாய்ந்தான், பாலன், அன்பழகன், பாஸ்கர், அரசு கொறடா அனந்தராமன் கலந்து கொண்டனர்.

தி.மு.க. அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், தொகுதி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்கள், பல்வேறு அமைப்பினர் நிகழ்ச்சியில் பங்கேற்று அமைச்சர் கந்தசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மூத்த நிர்வாகிகள் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக், சஞ்சய்தத், மற்றும் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் டெல்லியில் இருந்து செல்போன் மூலம் அமைச்சர் கந்தசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம், கந்தன்பேட், நரம்பை, ஈச்சங்காடு, வம்பாபேட், வள்ளுவர்மேடு, கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், கம்பளிக்காரன்குப்பம், தனிக்குப்பம், கோர்க்காடு, செம்பியப்பாளையம், ஏம்பலம், சேலியமேடு, குடியிருப்புபாளையம், பின்னாட்சிக்குப்பம், சார்காசிமேடு, ஆதிங்கப்பட்டு உள்ளிட்ட ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் உள்ள கோவில்களில் அமைச்சர் கந்தசாமியின் பிறந்த நாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும் ஆதரவற்றோர், முதியோர் இல்லம், ஜிப்மர் வளாகத்தில் புறநோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்