பாளையங்கோட்டையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை முன்பு இருந்து தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று காலை தொடங்கியது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

Update: 2019-01-30 22:00 GMT
நெல்லை,

பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை முன்பு இருந்து தொழுநோய் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நேற்று காலை தொடங்கியது. இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறுகையில், “தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவு நாள் உலக தொழுநோய் ஒழிப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி வரை தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், வினாடி-வினா போட்டி, கண்காட்சி, மருத்துவ முகாம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட உள்ளன. நெல்லை மாவட்டத்தில் புதிதாக 141 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 138 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொழுநோய் இல்லாத தேசத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்“ என்றார். பேரணி முக்கிய வீதிகளில் சென்றது. இந்த பேரணியில் நெல்லை மருத்துவ பணிகளின் துணை இயக்குனர் (தொழுநோய்) ஆஷா, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் அப்துல்காதர் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்