இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது.

Update: 2019-01-30 22:45 GMT
குளித்தலை,

படித்த இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேலை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குளித்தலையில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு குளித்தலை ஒன்றிய தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த குளித்தலை போலீசார் மறியலில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 23 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்