ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பங்களிப்பு தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது தம்பிதுரை பேட்டி

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு வேலை நிறுத்தம் தீர்வாகாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசும் தனது நிதிநிலை குறித்து தெளிவாக மக்களிடம் எடுத்து கூறியுள்ளது.

Update: 2019-01-30 22:45 GMT
கரூர்,

கரூரில் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு வேலை நிறுத்தம் தீர்வாகாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும் தமிழக அரசும் தனது நிதிநிலை குறித்து தெளிவாக மக்களிடம் எடுத்து கூறியுள்ளது. எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். ஓய்வூதிய திட்டத்துக்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த பங்களிப்பு தொகை குறித்து தவறான தகவல் பரப்பப்படுகிறது. பிடித்தம் செய்யப்பட்ட தொகை அவரவரின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி நிலுவை தொகையான ரூ.5 ஆயிரம் கோடியை மத்திய அரசு தரவில்லை. கஜா புயலுக்கு ரூ.15 ஆயிரம் கோடி கேட்கப்பட்டது அதையும் தரவில்லை. ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் உள்ளவர்களை வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்களுக்கு மத்திய அரசு வரிவிலக்கு அளிக்குமா? என்பதை பார்ப்போம் இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்