பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்திய கிராமமக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வீரடிப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.

Update: 2019-01-30 22:30 GMT
கந்தர்வகோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த வீரடிப்பட்டி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு வரை சுமார் 130 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மொத்தம் 6 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாக்டோ-ஜியோ சங்கத்தின் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. இதனால் தினசரி கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் இல்லாததால் வகுப்புகளில் காத்திருந்து திரும்பி சென்றனர். இதனையறிந்த கிராமமக்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் கிராமத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலைக்காக காத்திருக்கும் சுப்பிரமணியன், ராதிகா, பரமேஸ்வரி போன்ற பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்து தினசரி பள்ளி வழக்கம் போல் நடைபெற செய்தனர். மேலும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மற்றும் வட்டாரக் கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் மாணவ-மாணவிகளுக்கு தினசரி சத்துணவு திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. இந்த பணியினை பெற்றோர்கள் சார்பாக சக்திவேல் மற்றும் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்