கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தில் புதிதாக பதவி ஏற்ற மடாதிபதி மீது தாக்குதல் இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது
கும்பகோணத்தில் உள்ள வீரசைவ பெரிய மடத்தில் புதிதாக பதவி ஏற்ற மடாதிபதி தாக்கப்பட்டார். இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமககுளம் அருகே வீரசைவ பெரிய மடம் உள்ளது. இந்த மடத்தை தலைமையிடமாக கொண்ட கிளை மடங்கள் கர்நாடாகவிலும், இலங்கையிலும் உள்ளன. தமிழகத்தில் திருவாரூர், தாராசுரம் ஆகிய இடங்களில் வீரசைவ பெரிய மடம் உள்ளது. மிகவும் பழமையான இந்த மடத்தின் 97-வது மடாதிபதியாக நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் மடத்தில் இருந்து திடீரென வெளியேறியதாக தெரிகிறது. இதன் காரணமாக மடத்தின் புதிய மடாதிபதியாக கர்நாடகாவை சேர்ந்த பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள்(வயது 30) என்பவரை நேற்று முன்தினம் மடத்தின் நிர்வாக குழுவினர் நியமித்தனர். அவருக்கு நேற்று முன்தினம் பதவியேற்பு விழா நடந்தது. இதைத்தொடர்ந்து அவர் புதிய மடாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
மிகவும் பழமையான மடங்களுள் ஒன்றான வீரசைவ பெரிய மடத்துக்கு புதிய மடாதிபதி திடீரென நியமிக்கப்பட்டது கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி தகவல் அறிந்த 97-வது மடாதிபதி நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள், பெங்களூருவில் இருந்து நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் உள்ள மடத்துக்கு 50-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் வந்தார்.
அப்போது மடம் பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளின் ஆதரவாளர்கள், மடத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மடத்தில் இருந்த புதிய மடாதிபதியின் உருவ படங்களை அடித்து நொறுக்கிய அவர்கள், விளம்பர பேனர்களையும் கிழித்து எறிந்தனர்.
புதிதாக பதவி ஏற்ற மடாதிபதி மற்றும் அவருடைய ஆதரவாளர்களையும், நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகளின் ஆதரவாளர்கள் தாக்கி, மடத்தில் இருந்து வெளியேற்றினர். இதுபற்றி தகவல் அறிந்த கும்பகோணம் போலீசார் அங்கு விரைந்து சென்று மடத்தில் இருந்த புதிய மடாதிபதி மற்றும் அவருடைய ஆதரவாளர்களை மீட்டனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் மற்றும் அவரது உதவியாளர்கள் பசவ நிரஞ்சன்சுவாமி, பசவ பிரபு ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நள்ளிரவில் நடந்த இந்த சம்பவங்களுக்கு பிறகு மடாதிபதியின் இருக்கையில் நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் அமர்ந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கும்பகோணத்தில் உள்ள வீரசைவ பெரிய மடம் பாரம்பரியமான மடமாகும். இந்த மடத்துக்கு கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. தற்போது பெங்களூருவில் மெட்ரோ ரெயில் திட்ட பணிக்காக இந்த மடத்துக்கு சொந்தமான இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் மடத்துக்கு இழப்பீடாக ரூ.120 கோடி கிடைத்தது.
இந்த தொகையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என நிர்வாக குழுவில் உள்ள சிலர் கேட்டனர். நான் அவர்களுக்கு உடன்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், நான் கும்பகோணத்தில் இல்லாத நேரம் பார்த்து இங்கு வந்து புதிய மடாதிபதியை நியமனம் செய்து நாடகம் நடத்தி உள்ளனர்.
இந்த மடத்துக்கு நான் தான் மடாதிபதி. நான் தான் மற்றவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். நான் இல்லாமல் நடந்த இந்த பதவியேற்பு செல்லாது. தற்போது உள்ள நிர்வாக குழு கலைக்கப்பட்டு விட்டது. புதிய நிர்வாக குழு விரைவில் தேர்ந்தெடுக்கப்படும். மடத்தில் எனது அறையில் இருந்த 5 கிலோ வெள்ளி பொருட்களையும், ரூ.10 லட்சத்தையும் காணவில்லை. இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே கும்பகோணம் மேற்கு போலீசில் நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தான் ஊரில் இல்லாத நேரத்தில் மடத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த சிலர், அங்கிருந்த 5 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 லட்சத்தை திருடிச் சென்று இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.
இதேபோல் புதிய மடாதிபதியாக பதவியேற்ற பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் கொடுத்த புகாரில் தன்னையும், தனது ஆதரவாளர்களையும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளார். இரு தரப்பு புகார்களையும் போலீசார் பெற்றுக்கொண்டனர்.
இதில் பசவ முருகசாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பகோணம் மடத்து தெருவை சேர்ந்த இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி மாநில பொதுச்செயலாளர் குருமூர்த்தி(43), உப்புகாரத்தெருவை சேர்ந்த இந்து மக்கள் கட்சியின் நகர செயலாளர் பாலாஜி(42) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கும்பகோணத்தில் உள்ள மிகவும் பழைமை வாய்ந்த மடத்தில் நடந்து வரும் இந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.