வானவில்: திருடர்களை ஏமாற்றும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்
சந்தையில் பல மாடல்களில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது.
‘கெவின்’ என்றழைக்கப்படும் இது நமது வீட்டில் இருக்கும் பொருட்களை திருடர்களிடமிருந்து காப்பாற்றும். நாம் வீட்டில் இல்லாவிட்டாலும் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
அவ்வப்போது விளக்குகளை போட்டு அணைப்பது, சமைக்கும் ஓசை, தண்ணீர் சப்தம் போன்ற ஒலிகளை எழுப்பும். இது மட்டுமின்றி எல்.இ.டி விளக்குகளைக் கொண்டு வீட்டிற்குள் நிழல் அசைவது போன்ற பிம்பத்தையும் ஏற்படுத்தும். ஒரு முறை கேட்ட ஒலிகளை மீண்டும் எழுப்பாமல் புதுவிதமான சத்தங்களை உண்டாகச் செய்யும் இந்த ஸ்பீக்கர் வீட்டில் இருந்தால், வீட்டில் ஆள் இல்லை என்று சத்தியம் செய்தால் கூட யாரும் நம்ப மாட்டார்கள். நாமும் தைரியமாக வெளியூர் சென்று வரலாம்.