வானவில்: கால்களுக்கு பயிற்சியளிக்கும் ஆபிசைசர்

அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு கால்களில் போதிய ரத்த ஓட்டமின்றி பல பிரச்சினைகள் ஏற்படும்.

Update: 2019-01-30 15:48 GMT
போதிய உடற்பயிற்சியும் இல்லை என்றால் கால்கள் மரத்து போய் அவஸ்தையை ஏற்படுத்தும். அமர்ந்த இடத்திலேயே கால்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே ‘ஆபிசைசர்’ என்கிற இந்த சாதனத்தை கண்டு பிடித்துள்ளனர். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி, ஸ்கேட் போர்டு செய்வது என அனைத்து பயிற்சிகளையும் செய்ததற்கு ஒப்பான உணர்வைத் தருகிறது இந்த சாதனம். நமது நாற்காலியின் கீழே வைத்துக் கொண்டு கால்களை இதன் மீது இருக்கும்படி வைத்து வேண்டிய பயிற்சியை செய்யலாம். அக்குபிரஷர் புள்ளிகள் இருப்பதால் கால்களில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து நரம்புகளை ரிலாக்ஸ் செய்கிறது. நமக்கு வேண்டியபடி உயரத்தையும் அகலத்தையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இதில் பயிற்சி செய்வதால் கலோரிகளும் குறையும். இதில் முப்பது நிமிடம் பயிற்சி செய்வது 15 மைல் நடப்பதற்கு சமமாகும்.

செயலி மூலம் நமது தினசரி பயிற்சியின் முடிவாக குறைக்கப்பட்ட கலோரிகளை தெரிந்து கொள்ளலாம். ஆரோக்கியமான கால்களே நமது முழு உடலுக்கும் வலிமை தரும். எனவே இந்த ஆபிசைசர் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய சாதனம் ஆகும்.

மேலும் செய்திகள்