வானவில் : முகத்தை காட்டி உணவை பெறச் செய்யும் உணவகம்

கூட்டம் நிறைந்த விடுதிகளில் உணவை ஆர்டர் செய்த பின்னர் வெகு நேரம் காத்திருக்க வேண்டி வரும். இந்த பிரச்சினையை தீர்க்க கலிபோர்னியாவை சேர்ந்த துரித உணவகமான கேலிபர்கர் (CALIBURGER) ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

Update: 2019-01-30 12:13 GMT
செயற்கை அறிவாற்றல் தொழில்நுட்பத்தைக் கொண்டு இயங்கும் இம்முறையில் வாசலில் இருக்கும் கியோஸ்க்ஸ் என்னும் திரையில் வாடிக்கையாளர்கள் தங்கள் முகத்தை காண்பிக்க வேண்டும். ஒரு முறை காண்பித்தால் அது பதிவு செய்து கொள்கிறது.

வேண்டிய உணவை திரையிலேயே ஆர்டர் செய்து விரைவாக கிடைக்கச் செய்கின்றனர். திரை மூலம் ஆர்டர் செய்யப்படுவதால் பணியாளர்கள் பிஸியாக இருந்தாலும் உடனடியாக தர முடிகிறது என்கின்றனர். மீண்டும் அடுத்த முறை வரும் போது ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பமான உணவை நினைவில் வைத்துக் கொள்கிறது இந்த கியோஸ்க்ஸ் திரை.

இது மட்டுமின்றி கூடிய விரைவில் பர்கர்கள் செய்யவும் காய்கறிகள் நறுக்கவும் ரோபோக்களை பணியமர்த்தவும் திட்டமிட்டிருக்கின்றனராம்.

மேலும் செய்திகள்