முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின

பாளையங்கோட்டையில் நேற்று முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

Update: 2019-01-29 23:00 GMT
நெல்லை,

தமிழக அரசு சார்பில் 2018-19ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான நெல்லை மாவட்ட விளையாட்டுபோட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இந்த போட்டிகளை கலெக்டர் ஷில்பா கைப்பந்து விளையாடி தொடங்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வீரபத்ரன் அனைவரையும் வரவேற்றார். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ரமேஷ் ராஜா, நீச்சல் கழக தலைவர் திருமாறன் மற்றும் பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

இதை தொடர்ந்து கூடைப்பந்து, கைப்பந்து, கபடி, ஹேண்ட் பால், பூப்பந்து, மேஜை பந்து ஆகிய குழு போட்டிகளும், தடகள போட்டிகள், ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல், நீச்சல் போன்ற தனிநபர் போட்டிகளும் பல்வேறு பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இன்று(புதன்கிழமை) 2-வது நாள் போட்டிகள் நடைபெற உள்ளதாக, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வீரபத்ரன் தெரிவித்து உள்ளார். 

மேலும் செய்திகள்