நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.

Update: 2019-01-28 22:32 GMT
மும்பை,

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன. காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வகையில் கட்சியின் மராட்டிய அளவிலான நாடாளுமன்ற விவகார குழு கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.

அதன்படி இன்று மரத்வாடா, வடக்கு மராட்டியம், மேற்கு மராட்டியம் பகுதிகளின் வேட்பாளர்கள் தேர்வு பற்றியும், நாளை (புதன்கிழமை) விதர்பா மற்றும் மும்பை பகுதி வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது.

பரிந்துரைத்த பெயர்கள்

கட்சி நடைமுறைப்படி மாவட்ட கமிட்டி பரிந்துரைத்த பெயர்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இதில் தேர்வாகும் பெயர்கள் இறுதி முடிவுக்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்