நெய்க்காரப்பட்டி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மனு

நெய்க்காரப்பட்டி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2019-01-28 23:15 GMT
சேலம், 

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியில் படித்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ரோகிணியை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அதில், நாங்கள் கடந்த 2017-2018-ம் ஆண்டு நெய்க்காரப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தோம். இந்த பள்ளியில் இருந்து பிளஸ்-2 தேர்ச்சி பெற்று தற்போது நாங்கள் கல்லூரியில் சேர்ந்து படித்து வருகிறோம். இந்த நிலையில் பள்ளியில் எங்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகை 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. ஆனால் சுற்றுவட்டார பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டும் உதவித்தொகை வழங்கப்படவில்லை. தற்போது நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளதால் உதவித்தொகை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறோம். இந்த உதவித்தொகை கிடைத்தால் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். எனவே இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் மாணவர்களிடம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்