5-வது நாளாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் சாலை மறியலில் ஈடுபட்ட 2,064 பேர் கைது
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோவினர் 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மொத்தம் 2,064 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர்,
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக வழங்க வேண்டும். 3 ஆயிரத்து 500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3 ஆயிரம் சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்தப்படுவதை அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட ஜாக்டோ- ஜியோவினர் கடந்த 22-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
போராட்டத்தின் முதல் நாளில் ஆர்ப்பாட்டம், அடுத்தடுத்த நாட்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 25-ந் தேதி 4-வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாக்டோ- ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை தவிர மற்றவர்களை விடுவித்தனர். இதில் பெரம்பலூரில் 4 பேரையும், அரியலூரில் 13 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றதாக 4 ஆசிரியர்களை தமிழக அரசு உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரி அருளரங்கன் பணியிடை நீக்கம் செய்தார். இதனால் ஆசிரியர்களின் போராட்டம் தீவிரமடையும் என்று கூறப்பட்டது.
ஆனால் கடந்த 26, 27-ந் தேதிகளில் விடுமுறை தினத்தில் ஜாக்டோ- ஜியோவினர் போராட்டத்தில் ஈடுபடவில்லை. சமூக வலைத்தளங்களான முகநூல் (பேஸ்புக்), வாட்ஸ்-அப்களில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்கக்கோரியும், அவர்களின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும் கண்டன பதிவுகளை அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். மேலும் இனி தங்களது பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த ஆசிரியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்று தமிழக அரசு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.
ஆனாலும் அதனை கண்டு அஞ்சாமல், நேற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவினர் ஏராளமானோர் தங்களது பணிக்கு செல்லாமல் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே காலையிலேயே ஒன்று திரண்டனர். இதனால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் ஜாக்டோ- ஜியோவின் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான குமரிஅனந்தன், ராஜேந்திரன் தலைமையில் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மறியலில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க தொடங்கின. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலை கைவிடவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர். ஆனாலும் அவர்கள் மறியலை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 580 பெண்கள் உள்பட 1,010 அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர். ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று தங்களது பணிக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல் 9-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து அரியலூர் மாவட்ட அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோவினர் அரியலூர் அண்ணாசிலை அருகே நேற்று காலையில் ஒன்று திரண்டு சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஜாக்டோ -ஜியோவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில், அவர்கள் அரியலூர் பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 592 பெண்கள் உள்பட 1,054 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அருகே உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.