வேன் கவிழ்ந்து விபத்து விவசாய தொழிலாளர்கள் 20 பேர் படுகாயம்

ராஜபாளையம் அருகே வேன் கவிழ்ந்து விவசாய தொழிலாளர்கள் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-01-28 22:00 GMT

ராஜபாளையம்,

தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடத்தில் நடக்கும் பருத்தி அறுவடை வேலைக்காக, ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் இருந்து விவசாய கூலி தொழிலாளர்கள் 20 பேர் வேனில் சென்றுள்ளனர். கொல்லங்கொண்டான் சாலையில் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் நின்றுபடி சென்ற 20 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் சின்னப் பொண்ணு, லட்சுமி, மஞ்சனை, பிச்சையம்மாள், மஞ்சு உள்பட 10 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை மற்றும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரே பகுதியை சேர்ந்த 20 பேர் விபத்தில் சிக்கிய தகவல் அறிந்ததும், காயம் அடைந்தவர்களின் உறவினர்கள் 100–க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனை வளாகத்தில் குவிந்தனர்.

காயமடைந்தவர்களை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்துக்குள்ளான வாகனத்தை பறிமுதல் செய்த சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்