தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று தற்காலிக ஆசிரியர்களை பணியில் சேர்க்க நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர்கள் இன்று(செவ்வாய்க்கிழமை) பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-01-28 22:00 GMT
தூத்துக்குடி,

தற்காலிக ஆசிரியர்களை பணியில் சேர்க்க நடவடிக்கை குறித்து அவர் நேற்று காலை தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு உள்ளனர். பல இடங்களில் ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வராமல் உள்ளனர். இதனால் அரசு அறிவிப்பின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் நாளை(அதாவது இன்று) பணியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் அந்த ஆலைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.

தூத்துக்குடியில் பதிவு செய்யப்படாத விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை சார்பில் நோட்டீசு ஒட்டப்பட்டு உள்ளது. அதனை மீறி கடலுக்கு செல்லும் விசைப்படகு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

மேலும் செய்திகள்