5-வது நாளாக வேலை நிறுத்தத்தையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 600 பெண்கள் உள்பட 1,000 பேர் கைது
5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி திருவாரூரில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக 600 பெண்கள் உள்பட 1,000 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்,
பழைய ஓயவூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் செவிலியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.
21 மாத நிலுவை தொகை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர்் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கடந்த 22-ந் தேதி தொடங்கினர்.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது. இதை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர்் சங்கத்தின் மாவட்ட தலைவர் பைரவநாதன், அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் செல்வமணி, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் முருகேசன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் முத்துவேல், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட தலைவர் சண்முகவடிவேல், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 600 பெண்கள் உள்பட 1,000 பேரை கைது செய்தனர்.