மதுரவாயல் அருகே மின்வாரிய அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த பாம்பு 9 முட்டைகளுடன் மீட்பு
வானகரம் மின் வாரிய அலுவலகத்தில் பாம்பு பிடிபட்டது.
பூந்தமல்லி,
மதுரவாயலை அடுத்த வானகரத்தில் தமிழக அரசின் மின் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் பின்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தொட்டியில் பாம்பு ஒன்று முட்டையிட்டு இருந்தது.
இதனால் மின்சார கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வந்தனர். இதுகுறித்து கிண்டி சிறுவர் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் கிண்டி சிறுவர் பூங்கா ஊழியர் ஆனந்தன் எனபவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தொட்டியில் தஞ்சம் அடைந்து இருந்த சுமார் 7 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பை லாவகமாக பிடித்தார். அந்த பாம்பு இட்டிருந்த 9 முட்டைகளையும் மீட்டு சிறுவர் பூங்காவுக்கு கொண்டு சென்றார். இதனால் பொதுமக்கள், மின்வாரிய ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.