மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்த முத்தரையர் சங்கம் முடிவு

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது.

Update: 2019-01-27 22:45 GMT
திருச்சி,

தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் மத்திய மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. மாநில தலைவர் அம்பலத்தரசு தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் மனோகரன், துணை செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு சரியான முறையில் நிவாரணம் வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவது, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பான குழுக்களில் முத்தரையர்களை புறக்கணித்த அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு கண்டனம் தெரிவிப்பது, சங்கத்தின் மாவட்ட அளவிலான தேர்தல்களை வருகிற 10-ந்தேதிக்குள் நடத்தி முடிப்பது, சென்னையில் விரைவில் முத்தரையர் சங்க அலுவலக கட்டிடத்தை திறப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மணிமேகலை, சவுந்தரபாண்டியன், ராஜேந்திரன், கோவிந்தன், சந்திரபிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்