பாளையங்கோட்டை அருகே பரிதாபம்: அணையில் மூழ்கி என்ஜினீயர் பலி

பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூர் அணையில் மூழ்கி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-01-27 21:45 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூர் அணையில் மூழ்கி என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.

என்ஜினீயர்

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் உள்ள அன்னைநகரை சேர்ந்தவர் ஜெபமணி ஆசீர்வாதம். இவருடைய மகன் ஜெரி பிராங்கோ (வயது 27). என்ஜினீயரான இவர் ஒப்பந்த முறையில் வீடு கட்டிக்கொடுக்கும் தொழில் செய்து வந்தார்.

விடுமுறை நாளான நேற்று தன்னிடம் கட்டிட வேலை பார்க்கும் தொழிலாளர்களுடன் பாளையங்கோட்டை அருகே உள்ள மருதூர் அணைக்கட்டிற்கு குளிக்க சென்றார்.

அணையில் மூழ்கி சாவு

அங்கு அணையில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஜெரி பிராங்கோ தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். அவருடன் குளிக்க சென்றவர்கள் அவரை காணாமல் அணைப்பகுதியில் தேடினார்கள். சிறிது நேரத்துக்குப்பின் அவரை பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த முறப்பநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்