ஆத்தூரில் லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி

ஆத்தூரில் மோட்டார்சைக்கிளில் சென்ற 2 தொழிலாளர்கள், லாரி மோதியதில் பலியானார்கள்.

Update: 2019-01-27 22:00 GMT
ஆத்தூர், 

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 28). அதே பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (30). இருவரும் கூலித்தொழிலாளர்கள்.

தமிழ்செல்வனும், ராஜேந்திரனும், ஒரு மோட்டார்சைக்கிளில் நேற்று இரவு 7 மணியளவில் ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி, திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதை பார்த்த லாரி டிரைவர் அதே இடத்தில் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

லாரி மோதியதில் 2 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்