எடப்பாடியில் சாய பட்டறையில் தீ விபத்து ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

எடப்பாடி ஜலகண்டாபுரம் ரோடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் கார்த்தி. இவர் அந்த பகுதியில் சாய பட்டறை நடத்தி வருகிறார்.

Update: 2019-01-26 22:45 GMT

எடப்பாடி,

எடப்பாடி ஜலகண்டாபுரம் ரோடு அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மகன் கார்த்தி. இவர் அந்த பகுதியில் சாய பட்டறை நடத்தி வருகிறார். நேற்று மதியம் இவருடைய சாய பட்டறைக்கு மேல் செல்லும் மின் கம்பிகள் உரசியதில் மின்பொறி சாயம் ஏற்ற வைக்கப்பட்ட நூல் பேல் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் நூல் பேலில் தீ மளமளவென பிடித்து கரும்புகை வெளியேறியது. இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் நூல் பேல் மற்றும் கலர் சாயம் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்