போரூரில் முன்விரோதத்தில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு நண்பர் கைது
போரூரில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் வாலிபரை அரிவாளால் வெட்டிய நண்பர் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி,
மாங்காடு அடுத்த பெரிய பனிச்சேரியை சேர்ந்தவர் ஜெயசூர்யா(வயது 20). இவருடைய நண்பர் வினோத்(25). இவர் மீது கொலை வழக்கும், ஜெயசூர்யா மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளும் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
நேற்று முன்தினம் இரவு போரூர் தெள்ளியார் அகரம் பகுதியில் நண்பர்கள் இருவரும் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்தனர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வினோத், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெயசூர்யாவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கை, கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ஜெயசூர்யா, ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த போரூர் போலீசார், ஜெயசூர்யாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானை தந்தம் வைத்து இருந்ததாக வினோத், ஜெயசூர்யா இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் போலீசாருக்கு ஜெயசூர்யாதான் தகவல்கள் கொடுத்ததாகவும், அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஜெயசூர்யாவை அரிவாளால் வெட்டியதும் வினோத்திடம் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.