வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது மத்திய பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர் தகவல்
வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று மத்திய பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர் சத்தியவதி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் தேர்தல் துறை சார்பில் 9-வது தேசிய வாக்காளர் தினவிழா நேற்று காலை நடந்தது. தலைமை செயலாளர் அஸ்வனி குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி தேர்தல் துறை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு, மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான அபிஜித் விஜய் சவுத்ரி, காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி விக்ராந்த் ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் மத்திய பணியாளர் தேர்வு ஆணைய உறுப்பினர் சத்தியவதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசித்தார். அனைவரும் அதை திரும்பக்கூறி உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையும், சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதும், தேர்தல் துறை சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கி பேசினார். அப்போது சத்தியவதி கூறியதாவது:-
மக்களால் தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என்பது ஜனநாயகத்தின் தத்துவம். அதாவது, வாக்காளர் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளே ஆட்சி நடத்த வேண்டும். சிறப்பாக ஆட்சி அமைய வேண்டும் என்றால், நல்ல ஆட்சியை கொடுக்கக் கூடியவர்களை பார்த்து நாம் தேர்வு செய்ய வேண்டும். 18 வயது கடந்தவர்கள் அனைவரும் கட்டாயமாக தேர்தல் துறையில் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்தவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் தேசிய சராசரி விகிதம் 66 சதவீதம்தான். 34 சதவீதம் பேர் வாக்களிக்கவில்லை. அதாவது 28 கோடி பேர் தேர்தல் துறையில் வாக்காளராக பதிவு செய்த பிறகும் தேர்தலில் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலில் பெரிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் வாங்கிய வாக்குகளைவிட வாக்களிக்காதவர்களின் சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே அவர்களும் வாக்கு அளித்திருந்தால் தேர்தல் முடிவு எப்படி இருந்திருக்கும் என்பதை கூற முடியாது.
வெளியூரில் தங்கி வேலை செய்பவர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்று வருவதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியாத சூழல் உள்ளது. இதுபோன்ற வாக்காளர்கள் இணைய தளம் மூலமாகவோ அல்லது புதிய தொழில்நுட்பம் மூலமாக வாக்களிக்கக் கூடிய வசதியை ஏற்படுத்தி தருவதற்கான கொள்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்களிப்பதற்கான வசதியையும் ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மின்னணு வாக்கு பதிவு எந்திரம் மற்றும் விவிபாட் எந்திரம் குறித்த விழிப்புணர்வு குறும்படம் திரையிடப்பட்டது. முடிவில் நடமாடும் மின்னணு வாக்கு பதிவு எந்திரம் மற்றும் விவிபாட் எந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை சத்தியவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் சத்தியவதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் துறையில் உள்ள 49-ஓ மற்றும் 49-பி ஆகிய சட்ட பிரிவுகள் சமூக வலைதளங்கள் மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் அதிக மக்களை சென்றடைந்துள்ளது. இதுபோன்ற சட்டப்பிரிவுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தேர்தல் துறையின் பணி மட்டுமல்ல சமூக பொறுப்புணர்வு கொண்ட அனைவரின் பணியும் ஆகும். தேர்தலில் வாக்குச்சீட்டு முறைதான் சரியானது. அதேசமயம் வாக்கு பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என கூறுவது தவறு. வாக்குப்பதிவு எந்திரத்தில் எந்த ஒரு முறைகேடும் செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.