தொட்டியம் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

தொட்டியம் அருகே 2 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-01-25 22:45 GMT

தொட்டியம், 

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாய்க்கன்பட்டி முத்துராஜா தெருவை சேர்ந்தவர் நல்லையன். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மருதாம்பாள்(25). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன், மனைவி இடையே நேற்று தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த மருதாம்பாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மருதாம்பாளின் உடலை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்