கூத்தாநல்லூர் அருகே பெட்டிக்கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது

கூத்தாநல்லூர் அருகே பெட்டிக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-01-25 23:00 GMT
கூத்தாநல்லூர், 

கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி சதாம் உசேன் தெருவை சேர்ந்தவர் முகமது நசுருதீன் (வயது 24). இவர் பொதக்குடியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த அப்துல்காதர்ஜெய்லானி (25) என்பவர், முகமதுநசுருதீன் பெட்டிக்கடைக்கு சென்று பிளாஸ்டிக்கப், தண்ணீர் பாக்கெட், சிகரெட் கேட்டுள்ளார். இவை எல்லாம் தனது கடையில் விற்பது இல்லை என்று முகமதுநசுருதீன் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திமடைந்த அப்துல்காதர் ஜெய்லானி தகாத வார்த்தைகளால் முகமதுநசுருதீனை திட்டி அவரை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த முகமதுநசுருதீன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸ் நிலையத்தில் முகமதுநசுருதீன் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்காதர்ஜெய்லானியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்