பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தின விழா கவர்னர் வஜூபாய்வாலா நாளை தேசிய கொடி ஏற்றுகிறார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னர் வஜூபாய்வாலா நாளை(சனிக்கிழமை) தேசிய கொடி ஏற்றுகிறார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு,
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் மாநகராட்சி சார்பில் ஆண்டுதோறும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் நாளை (சனிக்கிழமை) மானேக்ஷா மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு மாநகராட்சி சார்பில் குடியரசு தின விழா நாளை(சனிக்கிழமை) பெங்களூருவில் உள்ள பீல்டு மார்ஷல் மானேக்ஷா மைதானத்தில் நடக்கிறது. சரியாக காலை 9 மணிக்கு கவர்னர் வஜூபாய்வாலா தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்துகிறார். அப்ேபாது விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்படுகின்றன.
இந்த விழாவுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பொதுமக்கள் அமர்ந்து விழாவை காண பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கவர்னர் தேசிய கொடியை ஏற்றிய பிறகு அணிவகுப்பை ஆய்வு செய்கிறார். அதன் பிறகு அவர் குடியரசு தினவிழா உரை நிகழ்த்துகிறார்.
அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக்கொள்கிறார். 32 குழுக்கள் பங்கேற்கின்றன. அது முடிந்த பிறகு 2,150 பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தற்போது இந்த கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. ராணுவ வீரர்களின் சாகச நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.
விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் டாக்டர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்களும் அங்கு நிறுத்தப்படும். அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அமர 9 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இவ்வாறு மஞ்சுநாத் பிரசாத் கூறினார்.
மேலும் மானேக்ஷா மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் கூறியதாவது:-
குடியரசு தின விழாவுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் 9 துணை போலீஸ் கமிஷனர்கள், 16 உதவி கமிஷனர்கள், 51 இன்ஸ்பெக்டர்கள், 108 சப்-இன்ஸ்பெக்டர்கள், 77 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 535 காவலர்கள், 71 மகளிர் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இது மட்டுமின்றி போக்கு வரத்து சீர்செய்யும் பணியில் 3 துணை போலீஸ் கமிஷனர்கள், 7 உதவி கமிஷனர்கள், 30 இன்ஸ்பெக்டர்கள், 50 சப்-இன்ஸ்பெக்டர்கள், 139 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 537 காவலர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
இது மட்டுமின்றி விழா நடைபெறும் மைதானத்தில் ஆயுதப்படை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். விழா மைதானத்திற்குள் சிகரெட், எளிதில் தீப்பற்றும் பொருட்கள், துண்டு பிரசுரங்கள், வாசனை திரவியங்கள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள், ஆயுதங்கள், உணவு மற்றும் தின்பண்டங்கள், மதுபானங்கள், கொடிகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களுக்கு அனுமதி கிடையாது. இவ்வாறு சுனில்குமார் கூறினார்.