3-வது நாளாக போராட்டம்: நாகர்கோவிலில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் மறியல் 1,200 பேர் கைது
நாகர்கோவிலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 3-வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 1,200 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
1-4-2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்திலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 3-வது நாளாக பணிகளுக்கு செல்லாமல் போராட்டம் நடத்தினர். இதனால் ஒரு சில இடங்களில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. அரசுத் துறைகளின் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
பணிக்கு செல்லாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் ஆங்கில வார்த்தைகளை குறிக்கும் சி.பி.எஸ். (கான்ட்ரிபியூசன் பென்சன் ஸ்கீம்) அரக்கன் என்று எழுதப்பட்ட கருப்பு துணியை ஆடையாகவும், முகத்தில் எலும்புக்கூட்டின் முகமூடியும் அணிந்து அரக்கனை போன்று வேடமிட்டு ஒருவர் பங்கேற்றார்.
மேலும் அவர் தனது கையில் கதாயுதமும் வைத்திருந்தார். அப்போது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நபர் வைத்திருந்த கதாயுதத்தை பெண் ஆசிரியர்கள் வாங்கி, அவரை தாக்குவது போன்று நடித்து காண்பித்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்புறம் உள்ள சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பகவதியப்பபிள்ளை, ஸ்ரீரமேஷ், சந்திரசேகர், சுரேஷ்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை கனகராஜ், பெனின் தேவகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் ஜாண் உபால்டு, வருவாய்த்துறை மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் கோலப்பன், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வேலவன், ராதாகிருஷ்ணன், நாஞ்சில் நிதி, முருகன் உள்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். மறியலின் போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நாகர்கோவில் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் கைது செய்தனர். இதில் மொத்தம் 950 பெண்கள் உள்பட 1,200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அனைவரையும் அரசு பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றி ராமன்புதூர் பகுதியில் உள்ள 2 திருமண மண்டபங்களுக்கு கொண்டு சென்றனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறும்போது, “ஜாக்டோ-ஜியோ தலைமை நிர்வாகிகள் எங்களுக்கு வழங்கிய ஆலோசனையின்படி எங்களது போராட்டம் தொடர்ந்து திட்டமிட்டபடி நடைபெறும். நாகர்கோவிலில் நாளை (அதாவது இன்று) நடைபெற உள்ள போராட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள். எங்களது போராட்டத்தால் கல்வி கற்பிக்கும் பணி மற்றும் அரசுத்துறை அலுவலகங்களின் பணி அடியோடு முடங்கியுள்ளது. பல பள்ளிகள், அரசு அலுவலகங்கள் பூட்டப்பட்டுள்ளன“ என்றார்.