ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தால் பாதிப்பு: லாலாபேட்டை அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பாடங்களை நடத்தாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, லாலாபேட்டை அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லாலாபேட்டை,
கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கரூரில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்வித்துறை மூலம், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப் பட்டன. எனினும் பல பள்ளிகளில் வகுப்பில் ஆசிரியர் இல்லாததால், மாணவர்கள் வெளியே நடமாடி கொண்டிருப்பதை காண முடிகிறது.
இந்த நிலையில் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், அப்பகுதியில் உள்ள திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் பாடங்கள் சரிவர நடத்தப்படாமல் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்கு அறிவுரை கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பாட வகுப்புகள், செய்முறை பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவை நடைபெறாமல் உள்ளன. விரைவில் அரசு தேர்வு தொடங்க உள்ள நிலையில், பாடம் நடத்தப்படாமல் இருப்பதால், மாணவர்களின் கவனம் திசை திரும்ப வாய்ப்புள்ளது. இதன் எதிரொலியாக வருகிற தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையக்கூடும். எனவே ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீண்டும் பள்ளிக்கு வந்து பாடம் நடத்த உரிய நடவடிக்கையை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.