வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 2-வது நாளாக சாலை மறியல் 500 பேர் கைது
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 250 பெண்கள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்,
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கின்ற அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்.
3 ஆயிரத்து 500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும். எல்.கே.ஜி. - யு.கே.ஜி. வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் நாகை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாகை-நாகூர் மெயின் சாலையில் 500-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மணிமாறன், ரமேஷ், புகழேந்தி, சரவணன், ராஜாராமன், அந்துவன் சேரல், நாகராஜ், செங்குட்டுவன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், மருந்தாளுனர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமரன், செந்தில்குமார் உள்பட போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 250 பெண்கள் உள்பட 500 பேரை கைது செய்து, அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவர்களை தங்க வைத்தனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக நாகை-நாகூர் மெயின் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.